சம்பவம் இருக்கு.. 125W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. வருகிறது பிரமாண்டமான Motorola போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ எக்ஸ்50 அல்ட்ரா ஸ்மார்ட்போனை சீனாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல் இந்த மோட்டோ எக்ஸ்50 அல்ட்ரா போன் ஆனது உலக சந்தை மற்றும் இந்தியச் சந்தைகளில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் இந்த போனின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. எனவே வரும் வாரங்களில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் சில அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 50 Pro specifications): 4500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 125 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
அதேபோல் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் சிப்செட், அமோஎல்இடி டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் மேம்பட்ட அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அம்சங்கள்: மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7030 6nm) சிப்செட் உள்ளது. மேலும் இதில் மாலி - ஜி610 எம்சி3 ஜிபியு (Mali-G610 MC3 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி (Full HD+ pOLED) ) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் உள்ளது. இந்த போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோபோகஸ் கேமரா வருகிறது.
இதில், மேக்ரோ மற்றும் டெப்த் லென்ஸ் ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) வருகிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ மாடலில் 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கனெக்டிவிட்டி அம்சங்களைப் பொறுத்தவரையில், வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) ஆகியவை வருகின்றன.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன் சிலிகான்/வேகன் லெதர் (Silicone/Vegan Leather) பேக் பேனல் கொண்டுள்ளது. பிளாக் பியூட்டி (Black Beauty), கேனீல் பே (Caneel Bay) மற்றும் சூதிங் சி (Soothing Sea) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








