Home
Mobile

எழுதி வெச்சுக்கோங்க.. இனி எல்லாரும் இதைதான் வாங்குவாங்க.. 125W சார்ஜிங்.. புதிய Motorola போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் அசத்தலான ஸ்மார்ட்போன் ஒன்றை உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை தான் இந்நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

தற்போது TDRA சான்றிதழ் தளத்தில் XT2403-2 என்ற மாடல் நம்பர் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ காணப்பட்டுள்ளது. இதற்கு முன்பு BIS மற்றும் IMEI இணையதளங்களில் கூட இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ காணப்பட்டது. எனவே வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

எழுதி வெச்சுக்கோங்க.. இனி எல்லாரும் இதைதான் வாங்குவாங்க..

இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) போன் ஆனது 4500எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகமாகும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 50வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங், 125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனின் பேட்டரி மற்றும் சார்ஜிங் வசதி குறித்த தகவல் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அம்சங்கள்: இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ மாடலில் 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) வருகிறது. இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரையில், வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) ஆகியவை வருகின்றன.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி (Full HD+ pOLED) ) டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோபோகஸ் கேமரா வருகிறது. இதில், மேக்ரோ மற்றும் டெப்த் லென்ஸ் ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. அதேபோல இந்த போனுக்கு 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் உள்ளன.

எழுதி வெச்சுக்கோங்க.. இனி எல்லாரும் இதைதான் வாங்குவாங்க..

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன் சிலிகான்/வேகன் லெதர் (Silicone/Vegan Leather) பேக் பேனல் கொண்டுள்ளது. பிளாக் பியூட்டி (Black Beauty), கேனீல் பே (Caneel Bay) மற்றும் சூதிங் சி (Soothing Sea) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7030 6nm) சிப்செட் வருகிறது. அதோடு மாலி - ஜி610 எம்சி3 ஜிபியு (Mali-G610 MC3 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Pro Spotted on BIS Site: May Launch in India Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X