Home
Mobile

பட்டைய கிளப்பும் Motorola.. 125W சார்ஜிங்.. 50MP கேமரா.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த புதிய போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று பிளிப்கார்ட் தளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் வரும் மார்ச் 23-ம் தேதி அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போனின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதியை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்லைனில் வெளியான மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

பட்டைய கிளப்பும் மோட்டோரோலா.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 50 Pro specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3)சிப்செட் வசதியுடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட். அதேபோல் கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

குறிப்பாக ஏஐ அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பட்டைய கிளப்பும் மோட்டோரோலா.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போனின் ரியர் கேமராவில் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கேமராவில் ஏஐ அடாப்டிவ் ஸ்டெபிலைசேஷன் (AI Adaptive Stabilaization), ஆட்டோ போகஸ் டிராக்கிங் (Auto Focus Tracking), ஆட்டோ போகஸ் டிராக்கிங் (Auto Focus Tracking), ஏஐ போட்டோ என்ஹான்ஸ்மென்ட் எஞ்சின் (AI Photo Enhancement Engine), டில்ட் மோட் (Tilt Mode) உள்ளிட்ட பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்படும். பர்பிள் (Purple), பிளாக் (Black) மற்றும் சிலவர் (Silver) நிறங்களில் இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

6.7-இன்ச் கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளே வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் வெளிவரும்.

பட்டைய கிளப்பும் மோட்டோரோலா.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

4500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 125W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்(Wireless Charging Support) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலைக் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனாலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Pro Specifications reveled: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X