Home
Mobile

வேற லெவல் டிசைன்.. AMOLED டிஸ்பிளே.. 256GB மெமரி.. 50MP கேமரா.. 125W சார்ஜிங்.. எந்த போன்?

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்பின்பு தான் உலக சந்தை மற்றும் இந்தியாவில் அறிமுகமாகும்.

இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ படங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. அதன்படி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், வளைந்த பன்ச் ஹோல் டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவரும். மேலும் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனின் அம்சங்கள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வேற லெவல் டிசைன்..  AMOLED டிஸ்பிளே.. 256GB மெமரி.. எந்த போன்?

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 50 Pro specifications): 6.7-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ( Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பர்பிள் (purple), சில்வர் (silver), பிளாக் (black) நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும்.

வேற லெவல் டிசைன்..  AMOLED டிஸ்பிளே.. 256GB மெமரி.. எந்த போன்?

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் கேமராக்கள் 6x ஜூம் ஆப்ஷன், ஆட்டோஃபோகஸ் (autofocus) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உள்ளிட்ட அம்சங்களை வழங்குகிறது. எனவே இந்த போனின் ரியர் கேமராக்கள் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் எடுக்க முடியும்.

வேற லெவல் டிசைன்..  AMOLED டிஸ்பிளே.. 256GB மெமரி.. எந்த போன்?

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக ஏஐ (AI) அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோரோலா போன் வெளிவரும்.

4500எம்ஏஎச் பேட்டரி (4500mAh battery) வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 125W வயர்டு (125W wired) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். அதேபோல் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.

Source: androidheadlines.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Pro renders and specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X