முரட்டு ஆபரை பெற்ற Motorola போன்.. இவ்ளோ விலை குறைக்க கூடாதுப்பா.. Flipkart-ல் கூட்டம் மோதுது.. என்ன மாடல்?
மோட்டோரோலா நிறுவனமானது அதன் எட்ஜ் 50 ப்ரோ மற்றும் எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து, எட்ஜ் 50 சீரிஸின் கீழ் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி (Motorola Edge 50 Ultra 5G) ஸ்மார்ட்போனை ஜூன் 18 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலைப்பாட்டில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனானது "அறிமுகமான நாளில் இருந்து இவ்ளோ மலிவான விலைக்கு வாங்க கிடைத்ததே இல்லை" என்று கூறும் அளவிற்கு.. பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
நினைவூட்டும் வண்ணம் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனானது ரூ.31,999 என்கிற ஆரம்ப விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்ப்போது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் நேரடி தள்ளுபடி, பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கேஷ்பேக் என மொத்தம் 3 சலுகைகள் கீழ்.. மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.29,999 (8ஜிபி + 256ஜிபி) க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது எந்த பிரத்யேக சலுகைகளும் இல்லாமல் நேரடியாக ரூ.2000 தள்ளுபடியை பெற்றுள்ளது. இதேபோல 125W சார்ஜருடன் வரும் 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷனை ரூ.34,999 க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் பிளாக் பியூட்டி மற்றும் லக்ஸ் லாவெண்டர் கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ மீதான வங்கி சலுகைகளைப் பொறுத்தவரை, எச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ.2,250 வரை தள்ளுபடியை பெறுவீர்கள். ஒருவேளை உங்களிடம் எச்டிஎப்சி வங்கி கார்டு இல்லையென்றால், ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கிரெடிட் கார்டுகள் (பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டுகள், ஆக்சிஸ் பேங்க் மற்றும் எஸ்பி கார்டுகள்) வழியாக ரூ. 2,000 வரையிலான தள்ளுபடியை பெறலாம்.

மேலும் காம்போ ஆஃபர்கள் மூலம் ரூ.1,000 தள்ளுபடியும் கிடைக்கும். எக்ஸ்சேன்ஜ் சலுகையை பொறுத்தவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பழைய ஸ்மார்ட்போன்களை பரிமாற்றம் செய்வதன் மூலம் கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடியை பெறலாம். இந்த 3 சலுகைகளையும் சரியாக பயன்படுத்தினால் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனை இதுவரை கிடைக்காத மலிவான விலைக்கு வாங்க முடியும்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஹலோ யுஐ உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 முக்கிய ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று மோட்டோரோலா நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உடனான 6.7-இன்ச் 1.5K பிஎல்ஓடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த சிப்செட் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் (OIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் + 10எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் உள்ளன.
முன்பக்கத்தில், குவாட்-பிக்சல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோஃபோகஸ் ஆதரவு உடனான 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி68-ரேடிங்கையும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 125W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் டர்போ சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 4,500எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. குறிப்பிடத்தக்க வேறுபாடாக 12ஜிபி ரேம் ஆப்ஷன் உடன் 125W சார்ஜர் வரும்; 8ஜிபி ரேம் ஆப்ஷன் உடன் 68W சார்ஜர் வரும்.


Click it and Unblock the Notifications