அதிரவிடும் விலை.. 512ஜிபி மெமரி.. 50எம்பி கேமரா.. 125W சார்ஜிங்.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் 3-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்படும் முன்பு விலை மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.
அதன்படி 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.44,999 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்றும், ஆனால் அறிமுக சலுகையாக இந்த போனை ரூ.33,999 விலையில் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. லாவெண்டர் பர்பிள் (Lavender Purple), பேர்ல் ஒயிட் (Pearl White) மற்றும் பிளாக் எக்லிப்ஸ் (Black Eclipse) நிறங்களில் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்படும்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 50 Pro specifications): 6.7-இன்ச் 1.5K ரெசல்யூஷன் கர்வ்ட் பிஓஎல்இடி(3D Curved pOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவரும். 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ மாடல்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3) சிப்செட் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோரோலா போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
50எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனின் கேமராவில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
அதாவது ஏஐ அடாப்டிவ் ஸ்டெபிலைசேஷன் (AI Adaptive Stabilaization), ஆட்டோ போகஸ் டிராக்கிங் (Auto Focus Tracking), ஆட்டோ போகஸ் டிராக்கிங் (Auto Focus Tracking), ஏஐ போட்டோ என்ஹான்ஸ்மென்ட் எஞ்சின் (AI Photo Enhancement Engine), டில்ட் மோட் (Tilt Mode) போன்ற கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனில் 4500எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 125W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்(Wireless Charging Support) உள்ளன. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.


Click it and Unblock the Notifications








