Home
Mobile

மடமடவென குறைந்த Motorola 5ஜி போன் விலை.. 50எம்பி கேமரா.. 68W சார்ஜிங்.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது mobile bonanza எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro 5G) போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் தற்போது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்பு இந்த போன் ரூ.31,999 விலையில் விலையில் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை பட்ஜெட் விலையில் வாங்கிவிட முடியும்.

மடமடவென குறைந்த Motorola 5ஜி போன் விலை.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 50 Pro specifications): 6.67-இன்ச் 1.5கே 10-பிட் பிஒஎல்இடி டிஸ்பிளே (1.5K 10-bit pOLED display) உடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2712 x 1220 பிக்சல்ஸ், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட் கொண்டு வெளிவந்தது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த போன் வெளிவந்தது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ மாடல். குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோஃபோகஸ் கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிப்ளி ரியர் கேமரா கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. அதேசமயம் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த அசத்தலான போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மகிவும் அருமையாக உள்ளது.

மடமடவென குறைந்த Motorola 5ஜி போன் விலை.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் 4500mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது . எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். மேலும் பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனில் உள்ளன. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Pro 5G with 8GB RAM price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X