Home
Mobile

கடகடவென சரியும் Motorola 5ஜி போன் விலை.. 50MP கேமரா.. 68W சார்ஜிங்.. 12ஜிபி ரேம்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி (Motorola Edge 50 Pro 5G) ஸ்மார்ட்போன் தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரக்கள், ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி போனின் அம்சங்கள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் 12ஜிபி ரேம் கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.26,950 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.25450 விலையில் வாங்கிவிட முடியும்.

கடகடவென சரியும் Motorola 5ஜி போன் விலை.. 50MP கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 50 Pro specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 720 ஜிபியு(Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன்.

அதேபோல் 6.67-இன்ச் 1.5கே 10-பிட் பிஒஎல்இடி டிஸ்பிளே (1.5K 10-bit pOLED display) வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 22712 x 1220 பிக்சல்ஸ், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோஃபோகஸ் கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ. மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

குறிப்பாக IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த அசத்தலானமோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது.

கடகடவென சரியும் Motorola 5ஜி போன் விலை.. 50MP கேமரா.. எந்த மாடல்?

4500mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழஙகும்.

குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 186 கிராம் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Pro 5G with 12GB RAM price slashed on amazon: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X