Home
Mobile

சரசரன்னு குறைந்த Motorola 5ஜி போன் விலை.. 50எம்பி கேமரா.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) ஸ்மார்ட்போன் தற்போது பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. 50எம்பி கேமரா, 68W சார்ஜிங் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்தது. இப்போது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

சரசரன்னு குறைந்த Motorola 5ஜி போன் விலை.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் (Motorola Edge 50 Neo Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Mediatek Dimensity 7300 chipset) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். பான்டோன் நாட்டிகல் ப்ளூ (Pantone Nautical Blue), பான்டோன் லட்டே (Pantone Latte), பான்டோன் பயின்சியானா (Pantone Poinciana), பான்டோன் Grisaille போன்ற நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கிறது.

6.4-இன்ச் 1.5கே பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display) உடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits peak brightness), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Gorilla Glass 3 protection) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . இதுதவிர 3X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zoom) ஆதரவு கொண்டுள்ளன இந்த ரியர் கேமராக்கள்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

அதேபோல் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உடன் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த போன். டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள்
(Dual speakers) கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ சாதனம்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன். அதேபோல் 4310mAh பேட்டரி உடன் இந்த புதிய மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Neo with 8GB RAM price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X