தீபாவளிக்கு ஆர்டர்னு போட்டா இதுதான்.. ஆஃபர் ரேட்ல SONY கேமரா.. pOLED டிஸ்பிளே.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. மார்கெட் விலையில் இருந்து நேரடி விலை குறைப்பு மட்டுமல்லாமல், கூடுதலாக பேங்க் தள்ளுபடி கிடைப்பதால், இதுவரையில் கிடைக்காத பட்ஜெட்டில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி சென்சார் மெயின் கேமரா, 4310mAh பேட்டரி, 68W டர்போ சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் கொண்ட இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் இதோ.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.23,999ஆக இருக்கிறது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் நேரடி விலை குறைப்பு போக ரூ.19,999 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இதுபோக கூடுதலாக ரூ.1,000 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.18,999 பட்ஜெட்டில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் (Motorola Edge 50 Neo Specifications): இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் கிடைக்கிறது. 5 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது.
இந்த பட்ஜெட்டுக்கு ஓஎஸ் அப்டேட் கூடுதலாகவே கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கொண்ட 6.4 இன்ச் (1200 x 2670 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் சூப்பர் எச்டி (Super HD) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்படுகிறது.
மேலும், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, எச்டிஆர்10பிளஸ் (HDRD10+) மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது. 300Hz டச் சாமபிளிங் ரேட் கொடுக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சார் மெயின் கேமராவில் உள்ளது.
மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி மற்றும் குவாட் பிக்சல் டெக்னாஜி கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங், 30X சூப்பர் ஜூம் மற்றும் மேக்ரோ விஷன் சப்போர்ட் கிடைக்கிறது. மோட்டோ ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த மோட்டோரோலா போனில் 32 எம்பி செல்பீ கேமரா மற்றும் அதில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கிடைக்கிறது.
68W டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4310mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.1 எம்எம் தடிமன் கொடுக்கிறது. இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்க MIL-STD 810H சர்டிபிகேஷன் உள்ளது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போனில் பான்டோன் நாட்டிகல் ப்ளூ (PANTONE Nautical Blue), பான்டோன் பாயின்சியானா (PANTONE Poinciana) ஆகிய கலர்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








