மிரளவிட்டாப்ல மோட்டோ.. pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 68W சார்ஜிங்.. 4310mAh பேட்டரி.. 12GB ரேம்.. எந்த மாடல்?
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் கொண்ட பிஓஎல்இடி டிஸ்பிளே, 30X சூப்பர் ஜூம் கொண்ட டெலிபோட்டோ கேமரா சிஸ்டம், 68W டர்போ சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 4310mAh பேட்டரி, 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) போன் வெளியாகி இருக்கிறது. இந்த போனின் பீச்சர்கள், விலை, விற்பனை விவரங்கள் இதோ.
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் (Motorola Edge 50 Neo Specifications): இந்த மோட்டோவில் 1.5K ரொசொலூஷன் கொண்ட 6.4 இன்ச் (1200 × 2670 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் வருகிறது.

எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. இந்த போனில் சோனி எல்ஒய்டிஐஏ 700சி (Sony LYTIA 700C) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.
இந்த அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் வருகிறது. அதேபோல டெலிபோட்டோ கேமராவில் 3X ஜூமிங் வருகிறது. குவாட் பிடிஏஎப் (Quad PDAF), ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. மேலும், மோட்டோ ஏஐ (Moto AI), ஸ்டைல் சின்ங் (Style Sync) மற்றும் 30X சூப்பர் ஜூம் (Super Zoom) சப்போர்ட் உள்ளது.
இந்த மோட்டோ போனில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்ட 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஷூட்டரிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி கொண்ட 2 வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மோட்டோரோலா மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) மற்றும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 68W டர்போ சார்ஜிங் (Turbo Charging) மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட் கொண்ட 4310mAh பேட்டரி வருகிறது.
MIL-STD 810H மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் மற்றும் IP68 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் 4 கலர்களில் வந்துள்ளது.
பான்டோன் கிரிசைல் (PANTONE Grisaille), பான்டோன் லாட்டே (PANTONE Latte), பான்டோன் நாட்டிகல் ப்ளூ (PANTONE Nautical Blue) மற்றும் பான்டோன் பாயின்சியானா (PANTONE Poinciana) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.46,350ஆக இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது.
யுகே மற்றும் ஐரோப்பிய மார்கெட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் அடுத்த சில வாரங்களில் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் ரூ.40,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. கேமரா, டிஸ்பிளே, பேட்டரி மற்றும் டிஸ்பிளேவில் பிரீமியம் பீச்சர்களை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த மோட்டோ மாடல் நல்ல ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications








