ஆக.29-ல் வரும் புதிய Motorola போன்.. OLED டிஸ்பிளே.. சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போனின் அறிமுகம் குறித்த தகவல் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியானது. ஒஎல்இடி டிஸ்பிளே, சோனி கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் (Motorola Edge 50 Neo Specifications): 6.36-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி(OLED)டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு 2400×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன்.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Octa Core MediaTek Dimensity 7300) சிப்செட் உள்ளது கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ. மாலி - ஜி610 எம்சி3 ஜிபியு (Mali-G610 MC3 GPU) கிராபிக்ஸ் கார்டும் இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
12 ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1டிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் என்று கூறப்படுகிறது. அதேபோல் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உடன் இந்த போன் அறிமுகமாகும். இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
50 எம்பி சோனி எல்ஒய்டி-700சி (Sony LYT-700C) மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 3X ஆப்டிகல் ஜூம் கொண்ட 10எம்பி டெலி போட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான படங்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். மேலும் மோட்டோரோலா எட்ஜ்50 போனில் டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட வசதிகள் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

அதேபோல் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மாரட்போனில் 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட5000mAh பேட்டரி இடம்பெறும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இதன் கனெக்டிவிட்டி அம்சங்களைப் பொறுத்தவரையில், வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) ஆகியவை கொடுக்கப்படும்.
குறிப்பாக பான்டோன் நாட்டிகல் ப்ளூ (Pantone Nautical Blue), பான்டோன் லட்டே (Pantone Latte), பான்டோன் பயின்சியானா (Pantone Poinciana), பான்டோன் Grisaille போன்ற நிறங்களில் இந்த போன் வெளிவரும். மேலும் ரூ.32,000 பட்ஜெட்டில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
Photo Credit: X/ @evleaks, Motorola


Click it and Unblock the Notifications








