Home
Mobile

இதுதான் புதிய Motorola போன்.. 50எம்பி கேமரா.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?

மோட்டோரோலா நிறுவனம் அடுத்து மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய மோட்டோரோலா போனின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டது. 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன். மேலும் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

இதுதான் புதிய Motorola போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo Specifications): 6.4-இன்ச ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display) வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி செகண்டரி கேமரா + 10எம்பி சென்சார் என ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இதில் உள்ளது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 chipset) வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.

IP68 தர வாட்டர் ரூ டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water & Dust Resistance) கொண்டிருக்கிறது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியும் உள்ளது. மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ வசதியுடன் இந்த புதிய போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4310எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. வரும் வாரங்களில் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியே போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo courtesy: 91mobiles.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Neo specifications, design released:check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X