புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. வருகிறது மிரட்டலான Motorola போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 50 Neo) போனை அறிமுகம் செய்தது. இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனுக்கு அடுத்து தற்போது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம். அதாவது வரும் வாரங்களில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் (Motorola Edge 50 Neo Specifications): ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோரோலா எட்ஜ்50 நியோ போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கூட உள்ளது.

அதேபோல் டூயல் ரியர் கேமரா, டைமன்சிட்டி சிப்செட், ஒஎல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போன் மேலும் கிரே (Gray), ப்ளூ (Blue), பாய்ன்சியானா (Poinciana)மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. தற்போது சில மோட்டோரோலா எட்ஜ்50 நியோ விவரக்குறிப்புகள் மட்டுமே வெளியாகி உள்ளது. விரைவில் இதன் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அம்சங்கள் (Motorola Edge 40 Neo Specifications): இந்த ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி (Full HD+ pOLED) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400×1080 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7030 6nm) சிப்செட் உள்ளது. மேலும் மாலி - ஜி610 எம்சி3 ஜிபியு (Mali-G610 MC3 GPU) கிராபிக்ஸ் கார்டும் இதில் உள்ளது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன். அதேபோல் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant)உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த போனில் டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மாரட்போனில் 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரையில், வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) ஆகியவை உள்ளது.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன் சிலிகான்/வேகன் லெதர் (Silicone/Vegan Leather) பேக் பேனல் கொண்டுள்ளது.மேலும் பிளாக் பியூட்டி (Black Beauty), கேனீல் பே (Caneel Bay) மற்றும் சூதிங் சி (Soothing Sea) ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








