வந்துட்டான்யா.. வந்துட்டான்.. pOLED டிஸ்பிளே.. 68W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்?
ஒருவழியாக மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துவிட்டது. குறிப்பாக 68W ஃபாஸ்ட் சார்ஜிங், 12ஜிபி ரேம், டால்பி அட்மாஸ், ட்ரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் (Motorola Edge 50 Neo Specifications): 6.4-இன்ச் 1.5கே பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display) உடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோபோன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits peak brightness), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Gorilla Glass 3 protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Mediatek Dimensity 7300 chipset) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization - OIS) ஆதரவு உடனான 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன். இதுதவிர 3X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zoom) ஆதரவு கொண்டுள்ளன இந்த ரியர் கேமராக்கள்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் பான்டோன் நாட்டிகல் ப்ளூ (Pantone Nautical Blue), பான்டோன் லட்டே (Pantone Latte), பான்டோன் பயின்சியானா (Pantone Poinciana), பான்டோன் Grisaille போன்ற நிறங்களில் இந்த புதிய மோட்டோரோலா போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speakers) உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் வெளிவந்துள்ளது. பின்பு என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய போன். இதுதவிர 4310mAh பேட்டரி உடன் இந்த புதிய மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.
ஆனால் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் ஆனது தற்போது இங்கிலாந்தில் (UK) மட்டுமே அறிமுகம் செய்ய்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனின் விலை 449.99 GBP (இந்திய மதிப்பில் ரூ.49,872)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








