செப்டம்பர் 16 வரை எந்த போனும் வாங்காதீங்க.. சோனி கேமரா.. இந்தியாவுக்கு வரும் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக சோனி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், 68W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
அதேபோல் இந்த ஏற்கனவே உலக நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிலும் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் (Motorola Edge 50 Neo Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Mediatek Dimensity 7300 chipset) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 இந்தியாவுக்கு வரும். அதேபோல் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோபோன் 6.4-இன்ச் 1.5கே பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display) கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits peak brightness), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Gorilla Glass 3 protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization - OIS) ஆதரவு உடனான 50எம்பி பிரைமரி சோனி எல்ஒய்டி-700சி (Sony LYT-700C) கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன். இதுதவிர 3X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zoom) ஆதரவு கொண்டுள்ளன இந்த ரியர் கேமராக்கள்.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் பான்டோன் நாட்டிகல் ப்ளூ (Pantone Nautical Blue), பான்டோன் லட்டே (Pantone Latte), பான்டோன் பயின்சியானா (Pantone Poinciana), பான்டோன் Grisaille போன்ற நிறங்களில் இந்த புதிய மோட்டோரோலா போன் விற்பனைக்கு வரும்.
அதேபோல் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.. மேலும் MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speakers) உடன் இந்த போன்வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அறிமுகம் செய்யப்படும். பின்பு என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய போன். இதுதவிர 4310mAh பேட்டரி உடன் இந்த புதிய மோட்டோரோலா போன் வெளிவரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.
பிளிப்கார்ட், மோட்டோரோலா இந்தியா ஆன்லைன் ஸ்டோர் தளங்களில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் விற்பனைக்கு வரும். அதேபோல் சற்று உயர்வான விலையில் இந்த புதிய போன் அறிமுகமாகும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications