அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. சோனி கேமரா.. 1டிபி மெமரி.. வருகிறது Motorola போன்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ ஜி35 5ஜி, மோட்டோரோலா ரேஸ்ர் 50 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதுதவிர இன்னொரு அட்டகாசமான போனையும கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். அதாவது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) போனையும் கொண்டுவர உள்ளது இந்நிறுவனம். இதுகுறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் ஆனது ஹங்கேரி ஆன்லைன் (Hungarian online) சில்லறை விற்பனையாளர் பட்டியலில் போன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் அங்கு இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்படும். அதன்பின்பு அனைத்து நாடுகளிலும் இந்த போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் (Motorola Edge 40 Neo Specifications):இந்த ஸ்மார்ட்போன் 6.36-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி(OLED)டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Octa Core MediaTek Dimensity 7300) சிப்செட் உள்ளது. மேலும் மாலி - ஜி610 எம்சி3 ஜிபியு (Mali-G610 MC3 GPU) கிராபிக்ஸ் கார்டும் இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
12 ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1டிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன். அதேபோல் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உடன் இந்த போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
50 எம்பி சோனி எல்ஒய்டி-700சி (Sony LYT-700C) மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 3X ஆப்டிகல் ஜூம் கொண்ட 10எம்பி டெலி போட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இந்த போனில் டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மாரட்போனில் 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட5000mAh பேட்டரி இடம்பெறும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இதன் கனெக்டிவிட்டி அம்சங்களைப் பொறுத்தவரையில், வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) ஆகியவை கொடுக்கப்படும்.
பான்டோன் நாட்டிகல் ப்ளூ (Pantone Nautical Blue), பான்டோன் லட்டே (Pantone Latte), பான்டோன் பயின்சியானா (Pantone Poinciana), பான்டோன் Grisaille போன்ற நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த போன் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும்.
photo courtesy: 91mobiles, ytechb.com


Click it and Unblock the Notifications








