Home
Mobile

இன்பதிர்ச்சி கொடுத்த Motorola.. ஆண்ட்ராய்டு 15 அப்டேட்.. எந்த ஸ்மார்ட்போனுக்கு தெரியுமா?

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனுக்கு இப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) போன்களுக்கு ஆண்ட்ராய்டு 15 (Android 15) அப்டேட் கிடைக்கத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது Reddit இல் பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டின் படி, மோட்டோரோலா எட்ஜ் 50 நியோவுக்கான ஆண்ட்ராய்டு 15 அப்டேட் சுமார் 1.63ஜிபி weighs கொண்டுள்ளது.

இதுதவிர மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்ட்ராய்டு 15 ஆனது மென்மையான கிராபிக்ஸ், வேகமான செயல்திறன் மற்றும் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த புதிய அப்டேட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இப்போது இந்த மோட்டோரோலா போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

இன்பதிர்ச்சி கொடுத்த Motorola.. ஆண்ட்ராய்டு 15 அப்டேட்..

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் (Motorola Edge 50 Neo Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Mediatek Dimensity 7300 chipset) சிப்செட் உடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்தது. பான்டோன் நாட்டிகல் ப்ளூ (Pantone Nautical Blue), பான்டோன் லட்டே (Pantone Latte), பான்டோன் பயின்சியானா (Pantone Poinciana), பான்டோன் Grisaille போன்ற நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் 6.4-இன்ச் 1.5கே பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display) உடன் வெளிவந்தது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits peak brightness), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Gorilla Glass 3 protection) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் போனில் உள்ளன.

குறிப்பாக OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எபோன். பின்பு 3X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zoom) ஆதரவு கொண்டுள்ளன இந்த ரியர் கேமராக்கள். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்பதிர்ச்சி கொடுத்த Motorola.. ஆண்ட்ராய்டு 15 அப்டேட்..

IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் MIL-STD 810H சான்றிதழ், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speakers) கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ சாதனம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் 4310mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), என்எப்சி,
யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன். தற்போது இந்த போன் ரூ.20,999 விலையில் வாங்க கிடைக்கிறது.

source

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Neo getting Android 15 update in India: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X