தூள் கிளப்பும் பிளிப்கார்ட்.. சோனி கேமரா.. 68W சார்ஜிங்.. ஆஃபரில் 2 Motorola போன்கள்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) போன்கள் சலுகை விலையில் வாங்க கிடைக்கின்றன. குறிப்பாக இந்த போன்கள் தரமான அம்சங்களுடன் வெளிவந்தன. இப்போது இந்த இரண்டு போன்களுக்கும் வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீத கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 26 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் (Motorola Edge 50 Neo Specifications): 6.4-இன்ச் 1.5கே பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display) உடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits peak brightness), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Gorilla Glass 3 protection) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Mediatek Dimensity 7300 chipset) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். பான்டோன் நாட்டிகல் ப்ளூ (Pantone Nautical Blue), பான்டோன் லட்டே (Pantone Latte), பான்டோன் பயின்சியானா (Pantone Poinciana), பான்டோன் Grisaille போன்ற நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கிறது.
50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன். இதுதவிர 3X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zoom) ஆதரவு கொண்டுள்ளன இந்த ரியர் கேமராக்கள்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. இந்த போனின் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உடன் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த போன். அதேபோல் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speakers) கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ சாதனம்.
4310mAh பேட்டரி உடன் இந்த புதிய மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 50 Fusion Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி உள்ளது.
6.7 இன்ச் 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த டிஸ்பிளேவில் 2400×1080 பிக்சல்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன், ரெசொலூஷன், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,144Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஆப்டிகல் இமேஜ் டெக்னாலஜி மற்றும் சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மாடல். குறிப்பாக இந்த போனின் கேமராவுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும்.
அதேபோல் இதன் வைடு கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் வருகிறது. இந்த கேமராவில் ஆல்-பிக்சல் போகஸ் (All-Pixel Focus) மற்றும் அல்ட்ரா எச்டி (Ultra HD) வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) கூட இதில் உள்ளது. இதுதவிர ஆடியோ ஜூம் (Audio Zoom), டூயல் கேப்ச்சர் (Dual Capture) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நைட் விஷன் (night vision), டில்ட் ஷிப்ட் (Tilt-Shift) பீச்சர்கள் இதன் ரியர் கேமராக்களில் உள்ளன. இந்த போனில் 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology), ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture) மற்றும் பேஸ் ரீடச் (Face Retouch) பீச்சர்கள் இந்த செல்பி கேமராவில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. பின்பு மூன்று ஓஎஸ் அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். அதேபோல் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்யூஷன் 5000mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP68 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வசதியும் இந்த போனில் உள்ளது.


Click it and Unblock the Notifications








