Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த! வெறும் ரூ.22999 போதும்.. SONY கேமரா.. pOLED டிஸ்பிளே.. 4310mAh பேட்டரி.. எந்த மாடல்?

மோட்டோரோலா பிரியர்கள் மட்டுமல்லாமல் மற்ற ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கும் எதிர்பார்த்ததைவிட பாதிக்கு பாதி கம்மி பட்ஜெட்டில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) போன் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 3X டெலிபோட்டோ ஜூம், 4310mAh பேட்டரி, டால்பி அட்மோஸ், மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் போன்ற பீச்சர்களில் பின்னியெடுக்கும் இந்த மோட்டோவின் முழு விரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் ஏற்கனவே குளோபல் மார்கெட்டில் வெளியாகிவிட்டது. ஆனால், குளோபல் மார்கெட்டில் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.46,350ஆக இருந்தது. இப்போது, இந்திய மார்கெட்டில் ரூ.22,999 ஆரம்ப விலையில் வெளியாகி பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் பிரியர்களை தட்டித் தூக்கி இருக்கிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த! வெறும் ரூ.22999 போதும்.. SONY கேமரா.. மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் (Motorola Edge 50 Neo Specifications): இந்த மோட்டோவில் 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டிஐஏ 700சி (Sony LYTIA 700C) சென்சார், ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது.

அதேபோல அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் வருகிறது. டெலிபோட்டோ கேமராவில் 3X ஜூமிங் மற்றும் 30X சூப்பர் ஜூம் (Super Zoom) செய்து கொள்ளலாம். மேலும், கேமரா பீச்சர்களுக்காக மோட்டோ ஏஐ (Moto AI) மற்றும் ஸ்டைல் சின்ங் (Style Sync) வருகின்றன. 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இதிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்யலாம்.

மேலும், குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்டிருக்கிறது. ஆகவே, கேமராவில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் பட்ஜெட்டைவிட கூடுதல் பீச்சர்களை பேக் செய்துள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கொண்ட 6.4 இன்ச் (1200 × 2670 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வருகிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த! வெறும் ரூ.22999 போதும்.. SONY கேமரா.. மாடல்?

1.5K ரொசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப் வருகிறது.

வழக்கமான மிட்-ரேஞ்ச் போன்களில் கிடைக்கும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது. IP68 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. அதேபோல பட்டையை கிளப்பும் டியூரபிலிட்டி கொடுக்கும் MIL-STD 810H மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் வருகிறது. 68W டர்போ சார்ஜிங் மற்றும் 4310mAh பேட்டரி வருகிறது.

மேலும், 15W வயர்லெஸ் சார்ஜிங் வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த மோட்டோ போன் நாட்டிகல் ப்ளூ (Nautical Blue), லாட்டே (Latte), கிரிசெயில் (Grisaille) மற்றும் பாயின்சியானா (Poinciana) ஆகிய கலர்களில் வெளியாகி இருக்கிறது. வரும் செப்டம்பர் 24ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது.

பிளிப்கார்ட் மற்றும் மோட்டோ இந்தியா ஆகிய தளங்களில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. இந்த மோட்டோரோலோ எட்ஜ் 50 நியோ போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆக இருக்கிறது. ரூ.1000 அறிமுக சலுகை கிடைக்கிறது. ஆகவே, ரூ.22,999 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Neo 5G Launched Sale From September 24 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X