ஆர்டர் போட்ருங்க.. சோனி கேமரா.. 68W சார்ஜிங்.. அறிமுகமானது Motorola 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50) ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போத இந்த போனின் விலை, அம்சங்கள், விற்பனை தேதி உள்ளிட்ட தகவல்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50 Specifications): 6.4-இன்ச ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (pOLED) டிஸ்பிளே உடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் சப்போர்ட், 1900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி உள்ளது.

50எம்பி சோனி எல்ஒய்டி-700சி பிரைமரி சென்சார் (Sony LYT-700C primary sensor) + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி 3X டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும்இ வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
MIL-810H இராணுவ சான்றிதழ் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போன். பின்பு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் வெளிவந்துள்ளது இந்த போன். 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 போன் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5000mAh பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங், 5W ரிவர்ஸ் வயர்லெஸ் வசதிகள் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். ஜங்கிள் கிரீன் (Jungle Green) மற்றும் பான்டோன் பீச் ஃபஸ் (Pantone Peach Fuzz)நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

5ஜி எஸ்ஏஃஎன்எஸ்ஏ (5G SA/NSA) டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11ax), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி(USB Type-C), என்எப்சி ( NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.
மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது. வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி இந்த போன் பிளிப்கார்ட், மோட்டோரோலா தளங்களில் விற்பனைக்கு வரும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது.
photo courtesy: fonearena.com


Click it and Unblock the Notifications








