Home
Mobile

ஆகஸ்ட் 1 வரை எந்த போனும் வாங்காதீங்க.. Sony கேமரா.. 68W சார்ஜிங்.. வருகிறது Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50 Specifications): 6.4-இன்ச ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் ஒஎல்இடி ( curved OLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 போன். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் சப்போர்ட், 1900 நிட்ஸ் ப்ரைட்னஸ், டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Motorola 5ஜி போன்..

50எம்பி சோனி எல்ஒய்டி-700சி பிரைமரி சென்சார் (Sony LYT-700C primary sensor) + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

MIL-810H இராணுவ சான்றிதழ் உடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 போன் அறிமுகமாகும். பின்பு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த போன். 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது.

ஆகஸ்ட் 1 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Motorola 5ஜி போன்..

5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி வசதியுடன் இந்த புதிய போன் வெளிவரும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, மோட்டோரோலா எட்ஜ் 50 போன் ரூ.23000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 India Launch Date Revealed: check specifications price, colors
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X