அவ்ளோ தானா.. வெறும் ரூ17,999 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 68W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
3டி கர்ட்வ் பிஓஎல்இடி டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் கேமரா, 68W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், IP68 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) போனுக்கு விலை குறைப்பு கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் கொண்ட இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனின் விலை விவரங்கள் மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் வெளியானபோது, இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆகவும் இருந்தது. இப்போது, 8 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆகவும், 12 ஜிரி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆகவும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த குறைக்கப்பட்ட விலையில் இருந்து ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட்டானது, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மற்றும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) இந்த விலைக்கு வாங்கி கொள்ளலாம். ரூ.9,350 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை வருகிறது.
சொல்லப்போனால், ரூ.22,999 பட்ஜெட்டில் வெளியாகியபோதே அதன் பீச்சர்கள் மிட்-ரேஞ்ச் லெவலில் இருந்ததால், விற்பனையில் சக்கைப்போடு போட்டது. இப்போது, விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் கூடுதலாக கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனில் IP68 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 புரொடெக்சன் கிடைக்கிறது.
3டி கர்வ்ட் டிஸ்பிளே கிடைக்கப்பதால், புரொடெக்சன் வருகிறது. ஆகவே, இந்த போனில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், டியூரபிலிட்டி எதிர்பார்க்க முடிகிறது. வீகன் லெதர் பேனலும் கிடைக்கிறது. ஹாட் பிங்க் (Hot Pink), ஃபாரெஸ்ட் ப்ளூ (Forest Blue), மார்ஷ்மெல்லோ ப்ளூ (Marshmallow Blue) மற்றும் ஃபாரெஸ்ட் கிரீன் (Forest Green) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 50 Fusion Specifications): பிரீமியம் டிசைன் மற்றும் டியூரபிலிட்டி மட்டுமல்லாமல், டிஸ்பிளே பீச்சர்களிலும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. ஏனென்றால், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷனுடன் 6.7 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
மேலும், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஒரேவொரு டிராபேக்காக ஓஎஸ் இருக்கிறது. ஏனென்றால், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், 3 ஜெனரேஷன் அப்டேட்களை கொடுக்கப்பதாக மோட்டோரோலா நிறுவனம் சொல்கிறது. ஆகவே, லேட்டஸ்ட் யுஐ பெற்று கொள்வது உறுதியாகும்.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனில் பர்ஃபாமென்ஸ் பக்கம் பார்க்கையில், அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு இந்த சிப்செட் பக்காவாகவே அவுட்புட் கொடுக்கும்படி பேக் செய்யப்பட்டுள்ளது.
50 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டி 700சி) மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. கர்வ்ட் டிஸ்பிளே இருந்தும் 5000mAh பேட்டரி கொடுக்கிறது. 68W ஃபாஸ்ட் சார்ஜிங், டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பீச்சர்கள் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்கள் இருப்பதை மறுக்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications








