Home
Mobile

ஆரம்பமே ஆஃபர்.. சோனி கேமரா.. 68W சார்ஜிங்.. புதிய Motorola 5ஜி போன் அறிமுகம்.. என்ன மாடல்? என்ன விலை?

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (motorola edge 50 fusion) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அம்சங்கள் (motorola edge 50 fusion Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 144Hz refresh rate), 1600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

ஆரம்பமே ஆஃபர்.. சோனி கேமரா.. புதிய Motorola 5ஜி போன் அறிமுகம்..

தரமான அக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இதை நம்பி வாங்கலாம்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

ஆரம்பமே ஆஃபர்.. சோனி கேமரா.. புதிய Motorola 5ஜி போன் அறிமுகம்..

OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டி-700சி சென்சார் (Sony LYT-700C sensor)+ 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா (மேக்ரோ ஆப்ஷன்) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் IP68 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது இந்த சாதனம்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ( 68W fast charging) வசதியும் உள்ளது. மேலும் இந்த போனின் எடை 174.9 கிராம் ஆகும்.

ஆரம்பமே ஆஃபர்.. சோனி கேமரா.. புதிய Motorola 5ஜி போன் அறிமுகம்..

5ஜி(5G), டூயல் 4ஜி வோல்ட்இ ( Dual 4G VoLTE), புளூடூத் 5.2 ( Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C), என்எப்சி (NFC), உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. பாரஸ்ட் ப்ளூ ( Forest Blue), ஹாட் பிங்க் ( Hot Pink), மார்ஷ்மெல்லோ ப்ளூ (Marshmallow Blue ) நிறங்களில் இந்த புதிய போனை வாங்க முடியும்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் விலை ரூ.22,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.24,999-ஆக உள்ளது. மே 22-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா.இன் தளங்களில் இந்த போனை வாங்க முடியும். பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
motorola edge 50 fusion With 12GB RAM, 50MP Camera Sale From May 22 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X