அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. pOLED டிஸ்பிளே.. 8GB ரேம்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் (Flipkart Big Billion Days Sale) 3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட்டில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) போன் கிடைக்கிறது. கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி எல்ஒய்டி சென்சாருடன் மெயின் கேமரா, 68W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி போன்ற மற்ற பீச்சர்களிலும் தட்டி தூக்கும்படி இருக்கிறது. இந்த மோட்டோவின் டிஸ்கவுண்ட் விவரங்கள் மற்றும் பீச்சர்கள் இதோ.
மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் பிளிப்கார்ட் விற்பனை (Motorola Edge 50 Fusion Flipkart Sale): இந்த மோட்டோவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,999ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ரூ.20,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையிலும் ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த டிஸ்கவுண்ட் பெறலாம். ஆகவே, ரூ.19,999 பட்ஜெட்டில் இந்த மோட்டோ போனை வாங்கி கொள்ளலாம். மார்ஷ்மெல்லோ ப்ளூ (Marshmallow Blue), ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green), ஃபாரஸ்ட் ப்ளூ (Forest Blue) மற்றும் ஹாட் பிங்க் (Hot Pink) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இப்போது பீச்சர்களை பார்ப்போம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 50 Fusion Specifications): இந்த மோட்டோவில் பிரீமியம் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆப்டிகல் இமேஜ் டெக்னாலஜி மற்றும் சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது.
வைடு கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் வருகிறது. இந்த கேமராவில் ஆல்-பிக்சல் போகஸ் (All-Pixel Focus) மற்றும் அல்ட்ரா எச்டி (Ultra HD) வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். மேலும், அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) வருகிறது. மற்ற பீச்சர்களை பார்க்கையில் ஆடியோ ஜூம் (Audio Zoom), டூயல் கேப்ச்சர் (Dual Capture) சப்போர்ட் உள்ளது.

மேலும், நைட் விஷன் (Night Vision), டில்ட் ஷிப்ட் (Tilt-Shift) பீச்சர்கள் உள்ளன. இந்த மோட்டோவில் 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) வருகிறது. மேலும், செல்பீ பிரியர்களுக்காக ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture) மற்றும் பேஸ் ரீடச் (Face Retouch) பீச்சர்கள் வருகின்றன.
இந்த போனில் வரும் பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்கள் பட்டையை கிளப்பு கின்றன. 6.7 இன்ச் (2400×1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் பேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
இதுபோக 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது. இந்த ப்யூஷன் போனில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. மூன்று ஓஎஸ் அப்டேட்கள் கொண்டிருக்கிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்யூஷன் போனில் 5000mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP68 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது.


Click it and Unblock the Notifications








