Home
Mobile

Moto-வின் முரட்டு போன் மீது ரூ.5000 டிஸ்கவுண்ட்.. 144Hz டிஸ்பிளே, IP68, 32MP செல்பீ கேமரா, 68W சார்ஜிங்!

பிளிப்கார்ட் (Flipkart) வலைதளத்தில், டிசம்பர் 13 ஆம் தேதி வரை நடக்க உள்ள எண்ட் ஆப் சீசன் சேல் (End of Season Sale) என்கிற சிறப்பு விற்பனையில் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீது பெரிய அளவிலான நேரடி தள்ளுபடிகள், பேங்க் கேஷ்பேக் ஆபர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன

அந்த பட்டியலில்.. அறிமுகமான நாள் முதல் தற்போது வரை ரூ.25,000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களில்" ஒன்றாக திகழும் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) மாடலும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

Moto-வின் முரட்டு போன் மீது ரூ.5000 டிஸ்கவுண்ட்!

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.5000 டிஸ்கவுண்ட்டை பெற்று ரூ.20,000 பட்ஜெட்டிற்கு இறங்கி வந்துள்ளது. பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது, மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 11% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.25,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.2000 பேங்க் கேஷ்பேக் ஆபரும் கிடைக்கிறது. இப்படியாக மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் மீது மொத்தம் ரூ.5000 தள்ளுபடி கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 10% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.27,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் மீதும் ரூ.2000 பேங்க் கேஷ்பேக் ஆபர் கிடைக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உடனான டிஸ்பிளே, ஐபி68 ரேட்டிங் (IP68 Rating), 50-எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 68W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) போன்றவைகளை கொண்டுள்ளது.

விரிவான அம்சங்களை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 14 (Android 14 OS) ஓஎஸ் அடிப்படையிலான ஹலோ யுஐ (Hello UI) கொண்டு இயங்கும். டிஸ்பிளேவை பொறுத்தவரை 1,600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1600 nits of peak brightness) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass 5 protection) உடனான 6.7-இன்ச் கர்வ்டு பிஓஎல்இடி டிஸ்பிளேவை (Curved pOLED display) கொண்டுள்ளது.

இதில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரும் (In-display fingerprint sensor) இருக்கும். கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50-மெகாபிக்சல் சோனி LYTIA 700C மெயின் சென்சார் மற்றும் 13-மெகாபிக்சல் அல்ட்ராவைடு மேக்ரோ ஷூட்டர் இருக்கும். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது..

இதுதவிர்த்து மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஆனது இந்தியாவில் 15 5ஜி பேண்டுகள் (5G Bands) மற்றும் வைஃபை 6-ஐ (WiFI 6) ஆதரிக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக, பேட்டரி மற்றும் பாஸ்ட் சர்ஜிங்கை பொறுத்தவரை, இது 68W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவு உடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் உடன் சேர்த்து மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) ஸ்மார்ட்போன் மீது தள்ளுபடி கிடைக்கிறது. பிளிப்கார்ட் வலைதளத்தில் உள்ள பேனரின்படி மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஆனது ரூ.41,999 க்கு பதிலாக வெறும் ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல மோட்டோரோலா ஜி85 5ஜி (Motorola G85 5G) ஆனது ரூ.20,999 க்கு பதிலாக வெறும் ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கும்

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Fusion Rs 5000 Discount New Price Rs 20999 in Flipkart New Sale till December 13
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X