Home
Mobile

சொல்லி அடித்த Motorola.. இந்த 5ஜி போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.. உற்சாகத்தில் பயனர்கள்..

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) போனுக்கு Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) அப்டேட் வெளியிடத் தொடங்கியுள்ளது. கடந்த மே மாதம் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கத் தொடங்கியுள்ளது. அதுவும் 1.92ஜிபி எடையுள்ள V1UUI35H.15-15-4 பதிப்பு எண்ணுடன் நிலையான ஆண்ட்ராய்டு 15 அப்டேட் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கும்.

சொல்லி அடித்த Motorola.. இந்த 5ஜி போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்..

அதேபோல் ஆண்ட்ராய்டு 15 அப்டேட் ஆனது மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனின் பேட்டரி ஆயுளை மேம்படுத்துவதோடு, தெப்ட் டிடெக்ஷன் லாக் (Theft Detection Lock), ஆப் ஆர்க்கைவிங் ( app archiving) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். இப்போது மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 50 Fusion Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த போனில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதேபோல் 6.7 இன்ச் 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த டிஸ்பிளேவில் 2400×1080 பிக்சல்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன்,1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மாடல். இந்த போனின் கேமராவுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும்.

குறிப்பாக இதன் வைடு கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் வருகிறது. மேலும் இந்த போனின் ரியர் கேமராக்களில் ஆல்-பிக்சல் போகஸ் (All-Pixel Focus), அல்ட்ரா எச்டி (Ultra HD) வீடியோ ரெக்கார்டிங், அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology), ஆடியோ ஜூம் (Audio Zoom), டூயல் கேப்ச்சர் (Dual Capture) உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.

சொல்லி அடித்த Motorola.. இந்த 5ஜி போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்..

இதுதவிர நைட் விஷன் (night vision), டில்ட் ஷிப்ட் (Tilt-Shift) பீச்சர்கள் இதன் ரியர் கேமராக்களில் உள்ளன. பின்பு இந்த போனில் 32 எம்பி செல்பி கேமரா வருகிறது. குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology), ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture) மற்றும் பேஸ் ரீடச் (Face Retouch) போன்ற பீச்சர்கள் இந்த செல்பி கேமராவில் உள்ளன.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்யூஷன் ஆனது 5000mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP68 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வசதியும் இந்த போனில் உள்ளது. தற்போது இந்த போன் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Fusion Phone Gets Android 15 Update in India: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X