Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. 68W சார்ஜிங்.. 50MP கேமரா.. புதிய மோட்டோரோலா போன் ரெடி.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போனின் டீசரை நேற்று வெளியிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வசதியுடன் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

மார்க்கெட்டே மிரள போகுது.. 68W சார்ஜிங்.. புதிய மோட்டோரோலா போன் ரெடி..

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அம்சங்கள் ( Motorola Edge 50 Fusion Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display) வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு இதன் டிஸ்பிளேவில் 2400 × 1080 பிக்சல்ஸ், 1600 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 பிராசஸர் (Qualcomm Snapdragon 7s Gen 2 processor ) வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன். குறிப்பாக ஸ்னாப்டிராகன் பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பிரியர்கள் விரும்பும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன்.

50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்புடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போன் வெளிவரும். எனவே இது சிறந்த ஆடியோ அனுபவம் வழங்கும்.

மார்க்கெட்டே மிரள போகுது.. 68W சார்ஜிங்.. புதிய மோட்டோரோலா போன் ரெடி..

டூயல் சிம், 5ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போன் வெளிவரும். ஐபி68 ரேட்டிங் கொண்டுள்ளது இந்த போன்.

அதேபோல் ஃபாரஸ்ட் ப்ளூ, ஹாட் பிங்க் மற்றும் மார்ஷ்மெல்லோ ப்ளூ நிறங்களில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக ரூ.25,000 பட்ஜெட்டில் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Fusion India Teaser Released: Launching Soon: Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X