Home
Mobile

ஏப்.2 புது மாடல் வருதுனு.. பழைய முரட்டு Motorola போன் மீது ரூ.6000 விலை குறைப்பு.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் ஆனது வருகிற 2025 ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அது மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் (Motorola Edge 60 Fusion) மாடல் ஆகும். இதற்கிடையில், பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) ஸ்மார்ட்போன் குறைக்கப்பட்ட விலையில் வாங்க கிடைக்கிறது.

தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் (8GB RAM + 128GB Internal Storage Option) ஆனது 23% நேரடி தள்ளுபடியை பெற்று, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.25,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் (Flipkart Axis Bank Credit Card) 5% கேஷ்பேக் சலுகையும் கிடைக்கிறது.

பழைய முரட்டு Motorola போன் மீது ரூ.6000 விலை குறைப்பு!

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை (Motorola Edge 50 Fusion Specifications) பொறுத்தவரை, இது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உடனான டிஸ்பிளே, ஐபி68 ரேட்டிங் (IP68 Rating), 50-எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 68W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) போன்றவைகளை கொண்டுள்ளது.

விரிவான அம்சங்களை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 14 (Android 14 OS) ஓஎஸ் அடிப்படையிலான ஹலோ யுஐ (Hello UI) கொண்டு இயங்கும். டிஸ்பிளேவை பொறுத்தவரை 1,600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1600 nits of peak brightness) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass 5 protection) உடனான 6.7-இன்ச் கர்வ்டு பிஓஎல்இடி டிஸ்பிளேவை (Curved pOLED display) கொண்டுள்ளது.

இதில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரும் (In-display fingerprint sensor) இருக்கும். கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50-மெகாபிக்சல் சோனி LYTIA 700C மெயின் சென்சார் மற்றும் 13-மெகாபிக்சல் அல்ட்ராவைடு மேக்ரோ ஷூட்டர் இருக்கும். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது..

இதுதவிர்த்து மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஆனது இந்தியாவில் 15 5ஜி பேண்டுகள் (5G Bands) மற்றும் வைஃபை 6-ஐ (WiFI 6) ஆதரிக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக, பேட்டரி மற்றும் பாஸ்ட் சர்ஜிங்கை பொறுத்தவரை, இது 68W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவு உடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள மோட்டோ எட்ஜ் 60 பியூஷன் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Motorola Edge 60 Fusion Expected Specifications and Price)? என்ன விலைக்கு வரும்? இது நான்கு பக்கமும் கர்வ்டு டிசைன் கொண்ட 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இது மோட்டோ AI அம்சங்களுடன் அனுப்பி வைக்கப்படலாம்

கேமராக்களை பொறுத்தவரை இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். அதில் 50MP ப்ரைமரி கேமரா + 13MP அல்ட்ராவைடு கேமரா + மேக்ரோ லென்ஸ் இடம்பெறலாம். இது 68W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5500mAh பேட்டரியை பேக் செய்யலாம். விலையை பொறுத்தவரை இது சுமார் ரூ.25,000 க்குள்ள என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Fusion Gets Rs 6000 Discount Ahead Motorola Edge 60 Fusion India Launch on April 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X