முரட்டு Motorola போன்.. ரூ.3000 விலை குறைப்பு..144Hz டிஸ்பிளே, IP68, 32MP செல்பீ கேமரா, 68W சார்ஜிங்!
மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷனின் விற்பனை ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட், மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் மீது திடீர் விலைக்குறைப்பை அறிவித்துள்ளது
தற்போது பிளிப்கார்ட்டில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.3000 தள்ளுபடியை பெற்று ரூ.25,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே தள்ளுபடி 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் மீதும் கிடைக்கிறது. இதவும் ரூ.3000 தள்ளுபடியை பெற்று ரூ.27,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாளை முதல் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இந்தியா வலைத்தளம் வழியாக ஏப்ரல் 9 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும். இது பான்டோன் அமேசானைட், பான்டோன் ஸ்லிப்ஸ்ட்ரீம் மற்றும் பான்டோன் ஜெஃபிர் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்.
மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.7-இன்ச் 1.5கே (1,220 x 2,712 பிக்சல்கள்) ஆல்-கர்வ்டு pOLED 120Hz டிஸ்பிளே
- வாட்டர் டச் 3.0, HDR10+ ஆதரவு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- SGS லோ ப்ளூ லைட் மற்றும் லோ மோஷன் ப்ளர் சான்றிதழ்களுடன் பான்டோன் வேலிடேட்டட் ட்ரூ கலர் சான்றிதழையும் கொண்டுள்ளது.
- 12ஜிபி வரை LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி uMCP ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட்
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை ஸ்டோரேஜ் விரிவாக்கம்
- ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான ஹலோ யுஐ
- நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் 3 வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும்
- எப்/1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT700C ப்ரைமரி சென்சார்
- எப்/2.2 அபெர்க்ஷர் உடன் கூடிய 13-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- பிரத்யேக 3-இன்-1 லைட் சென்சார்
- எப்/2.2 அபெர்க்ஷர் உடன் கூடிய 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா (4K வீடியோ ரெக்கார்ட் ஆதரவுடன்)
- 68W வயர்டு டர்போ சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,500mAh பேட்டரி
- IP68 மற்றும் IP69 தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு ரேட்டிங்
மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) உடனான டிஸ்பிளே, ஐபி68 ரேட்டிங் (IP68 Rating), 50-எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 68W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) போன்றவைகளை கொண்டுள்ளது.
விரிவான அம்சங்களை பொறுத்தவரை, இது ஆண்ட்ராய்டு 14 (Android 14 OS) ஓஎஸ் அடிப்படையிலான ஹலோ யுஐ (Hello UI) கொண்டு இயங்கும். டிஸ்பிளேவை பொறுத்தவரை 1,600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1600 nits of peak brightness) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass 5 protection) உடனான 6.7-இன்ச் கர்வ்டு பிஓஎல்இடி டிஸ்பிளேவை (Curved pOLED display) கொண்டுள்ளது.
இதில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரும் (In-display fingerprint sensor) இருக்கும். கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50-மெகாபிக்சல் சோனி LYTIA 700C மெயின் சென்சார் மற்றும் 13-மெகாபிக்சல் அல்ட்ராவைடு மேக்ரோ ஷூட்டர் இருக்கும். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது. கடைசியாக, பேட்டரி மற்றும் பாஸ்ட் சர்ஜிங்கை பொறுத்தவரை, இது 68W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவு உடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








