விலையை குறைத்து கூவி கூவி விற்பனை செய்ய தொடங்கிட்டாங்க.. சோனி கேமரா.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் 5ஜி (Motorola Edge 50 Fusion 5G) ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த மோட்டோரோலா போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் 5ஜி போன் ரூ.22,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனின் விலை குறைக்கப்பட்டு ரூ.18,889 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அமேசான் தளத்தில் இந்த போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த மோட்டோரோலா போனை ரூ.17639 விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் 5ஜி அம்சங்கள் (Motorola Edge 50 Fusion 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த போனில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.
6.7 இன்ச் 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போன். மேலும் இந்த டிஸ்பிளேவில் 2400×1080 பிக்சல்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
50 எம்பி சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C)மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர்
கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மாடல். இந்த போனின் கேமராவுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
இதன் வைடு கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் வருகிறது. பின்பு இந்த போனின் ரியர் கேமராக்களில் ஆல்-பிக்சல் போகஸ் (All-Pixel Focus), அல்ட்ரா எச்டி (Ultra HD) வீடியோ ரெக்கார்டிங், அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology), ஆடியோ ஜூம் (Audio Zoom), டூயல் கேப்ச்சர் (Dual Capture) உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.
இதுதவிர நைட் விஷன் (night vision), டில்ட் ஷிப்ட் (Tilt-Shift) பீச்சர்கள் இதன் ரியர் கேமராக்களில் உள்ளன. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் போனில் 32 எம்பி செல்பி கேமரா வருகிறது. குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology), ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture) மற்றும் பேஸ் ரீடச் (Face Retouch) போன்ற பீச்சர்கள் இந்த செல்பி கேமராவில் உள்ளன.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்யூஷன் ஆனது 5000mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP68 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வசதியும் இந்த போனில் உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications