Home
Mobile

இந்த ஒரு போனுக்கு இவ்வளவு சலுகையா? தூள் பறக்கும் விற்பனையில் Motorola Edge 50.. என்ன விலை? என்ன சலுகை?

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அதன் சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன் மாடலான மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50) சாதனத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 தொடரில், மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) மற்றும் எட்ஜ் 50 அல்ட்ரா (Motorola Edge 50 Ultra) போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய சாதனம் இப்போது Flipkart இல் வாங்குவதற்கு கிடைக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 50 என்ன வழங்குகிறது என்பதைப் பற்றிய விரிவான பார்வை இங்கே.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போன் சாதனம் இப்போது, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.27,999 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது ஜங்கிள் க்ரீன், பிரீமியம் வீகன் லெதர் ஃபினிஷுடன் கூடிய பீச் ஃபஸ் மற்றும் வீகன் ஸ்கின் உடன் கூடிய கோலா கிரே போன்ற மூன்று வண்ண வகைகளில் வருகிறது. இந்த சாதனத்தை பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இந்தியா போன்ற ஆன்லைன் ஸ்டோர்களிலும் வாங்கலாம்.

இந்த ஒரு போனுக்கு இவ்வளவு சலுகையா? தூள் பறக்கும் விற்பனையில் Motorola

மோட்டோரோலா எட்ஜ் 50 விற்பனை (Motorola Edge 50 Sale):

அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற பெரிய சில்லறை விற்பனை நிலையங்களிலும் இருந்து விருப்பமானவர்கள் வாங்கலாம். அறிமுக விற்பனையின் ஒரு பகுதியாக ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் EMI பரிவர்த்தனைகளுக்கு உடனடித் தள்ளுபடியாக ரூ.2,000 பெறலாம். கூடுதலாக, ரூ.2,889 தொடங்கி ஒன்பது மாதங்கள் வரை வட்டி இல்லாத EMI விருப்பத்துடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விலையை ரூ.25,999 ஆக குறைக்கிறது.

மோட்டோரோலா ரிலையன்ஸ் ஜியோவிடமிருந்து ரூ.10,000 மதிப்புள்ள ஆபரேட்டர் நன்மைகளையும் வழங்குகிறது. இதில் ஜியோ ரூ 2,000 வரை கேஷ்பேக் மற்றும் ரூ 8,000 வரை கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன. இதில் ரூ.399 (ரூ. 50 x 40 வவுச்சர்கள்) ப்ரீபெய்டு ரீசார்ஜ்களுக்கு கேஷ்பேக் செல்லுபடியாகும். மேலும், கூட்டாளர் சலுகையாக Swiggy ரூ. 299 உணவு ஆர்டர்களுக்கு ரூ. 125 தள்ளுபடி, Ajio ரூ. 999 பரிவர்த்தனைகளுக்கு ரூ. 200 தள்ளுபடி,

EaseMyTrip விமான டிவிக்கேட் புக்கிங்கிற்கு ரூ. 1,500 வரை தள்ளுபடி மற்றும் ஹோட்டல்களில் ரூ. 4,000 வரை தள்ளுபடி, மற்றும் AbhiBus பஸ் முன்பதிவுகளில் ரூ. 1,000 வரை 25% தள்ளுபடி என்று பல சலுகைகளை இப்போது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 போனுடன் நீங்கள் பெறலாம். மோட்டோரோலா எட்ஜ் 50 சாதனம் 6.7" இன்ச் வளைந்த பிஓஎல்இடி டிஸ்பிளேவுடன் 1.5K சூப்பர் எச்டி தீர்மானத்தை வழங்குகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 50 சிறப்பம்சம் (Motorola Edge 50 Specifications):

இந்த டிஸ்ப்ளே HDR10+ சப்போர்ட் உடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் ஆதரவை 1,600 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வழங்குகிறது. இதில் டால்பி அட்மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளது. இந்த போன் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 SoC ஆக்சிலரேட்டட் எடிஷனால் இயக்கப்படுகிறது. இது Wi-Fi 6E மற்றும் அதன் மேம்பட்ட நெட்வொர்க் திறன்கள் மூலம் வேகமான இணைப்பு இரண்டையும் ஆதரிக்கிறது.

இதன் ரேம் பூஸ்ட் அம்சமானது, வேகமான ஆப் லான்ச்கள் மற்றும் ஸ்மூத்தான மல்டி டாஸ்கிங்கை உறுதி செய்கிறது. இந்த போன் 5000mAh பேட்டரி உடன் 68W பாஸ்ட் வயர்டு டர்போபவர் சார்ஜிங் மற்றும் 15W வரை வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறது. இந்த போன் 50MP + 13MP + 10MP கொண்ட ட்ரிபிள் கேமரா மற்றும் 32MP கொண்ட செல்பி கேமராவை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 Flipkart Sale Price Details and Abundant Offer Details Check Immediately
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X