Home
Mobile

Motorola போனுக்கு தள்ளுபடியை அள்ளி வீசிய அமேசான்.. சோனி கேமரா.. 256ஜிபி மெமரி.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 50 5ஜி (Motorola Edge 50 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.20490 விலையில் வாங்கிவிட முடியும்.

Motorola போனுக்கு தள்ளுபடியை அள்ளி வீசிய அமேசான்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 50 5ஜி 5ஜி (Motorola Edge 50 5G Specifications): 6.4-இன்ச ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (pOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 5ஜி போன். இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் சப்போர்ட், 1900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி உள்ளது.

ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Snapdragon 7 Gen 1) சிப்செட் வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.

MIL-810H இராணுவ சான்றிதழ் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் வெளிவந்துள்ளது இந்த போன். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 மாடல்.

50எம்பி சோனி எல்ஒய்டி-700சி பிரைமரி சென்சார் (Sony LYT-700C primary sensor) + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி 3X டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 32எம்பி செல்பி கேமரா மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். ஜங்கிள் கிரீன் (Jungle Green) மற்றும் பான்டோன் பீச் ஃபஸ் (Pantone Peach Fuzz) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11ax), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி(USB Type-C), என்எப்சி ( NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா எட்ஜ் 50 5ஜி போனில் உள்ளன.

அதேபோல் 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 5ஜி போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 50 5G with 8GB RAM available at 33 percent discount on Amazon: check new price here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X