என்ன ஸ்டைல்.. அள்ளுதே அழகு..! அட்டகாச 5ஜி ஸ்மார்ட்போனை இறக்கிவிடும் Motorola.!
சமீபத்தில் மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஸ்மார்ட்போனை சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்தது மோட்டோரோலா நிறுவனம். இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 40 எனும் புதிய ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். அதாவது இந்த புதிய போன் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த புதிய போன் தரமான சிப்செட் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் ஆனது 6.65-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இதன் டிஸ்பிளே தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.
அதேபோல் மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 8020 பிராசஸர் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு கேமிங் பயனர்கள் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும். பின்பு இந்த புதிய போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
குறிப்பாக 4600 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் எனப் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புத்தம் புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.2, வைஃபை 802.11, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளர் இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன். பின்பு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், Dolby Atmos, 3 மைக்ரோஃபோன்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போன் வெளிவரும்.
மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களும் அருமையாக தான் உள்ளது. ஆனால் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications