இந்த போனுக்காக தவம் கெடக்கறாங்க! உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Motorola 5G போன்: அறிமுகம் எப்போது?
மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் 4ஜி போன்களை அறிமுகம் செய்வதை விட 5ஜி போன்களை அறிமுகம் செய்யத் தான் அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
அதாவது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ போன் ஆனது இந்தியா உட்பட பலவேறு நாடுகளில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இப்போது இணையத்தில் கசிந்த இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தரமான டிஸ்பிளே
மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் OLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2400×1080 பிக்சல்ஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.
குறிப்பாக இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த செயல்திறன் கொடுக்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் அறிமுகமாகும்.

ட்ரிபிள் ரியர் கேமரா
மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 60எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஆனது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

அசத்தலான பேட்டரி
இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 125 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 15 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ போன். மேலும் 5ஜி,4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த மார்ச் மாத இறுதியில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








