ஒன்பிளஸ் போன்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு வேற லெவல் 5ஜி போனை அறிமுகம் செய்த Motorola.!
ஒன்பிளஸ், விவோ போன்ற முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ஒன்பிளஸ் போன்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு வேற லெவலில் புதிய போனை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா. அதாவது மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு, தரமான சிப்செட், அசத்தலான கேமரா எனப் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1,080 x 2,400 பிக்சல்ஸ், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதாவது மற்ற போன்களை விட இந்த புதிய மோட்டோரோலா போன் தனித்துவமான டிஸ்பிளே அனுபவத்தைக் கொடுக்கும்.
அதேபோல் மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் சிப்செட் உடன்Adreno next-gen GPU வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த செயல்திறன் கொடுக்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 12எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் மூலம் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 60எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா போன்.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், 4 மைக்ரோஃபோன்கள் உள்ளிட்ட பல அசத்தலான வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய போன். அதேபோல் நீர் மற்றும் தூசி எதிர்ப்பு தன்மையைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4600எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 125W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங், 5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகிய ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த போன். இந்த புதிய போன் தற்போது ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த போன் விற்பனைக்கு வரும். அதேபோல் மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ போனின் விலை US$ 985 (இந்திய மதிப்பில் ரூ.80,930)-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications