செப்.28 வந்தா ஆளுக்கொரு ஆர்டர்.. ரூ.4000 டிஸ்கவுண்ட்.. 12GB ரேம்.. 68W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?
இந்திய மார்கெட்டில் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo) போன் முழுதாக ரூ.4,000 ஆஃருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பிரீமியம் அம்சங்களுடன் பின்னிப்பெடல் எடுக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அம்சங்கள் (Motorola Edge 40 Neo Specifications): இந்த போன் 6.55 இன்ச் (2400×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு 10 பிட் கர்வ்ட் பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த மோட்டோரோலா போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7030 6nm) சிப்செட் வருகிறது. அதோடு மாலி - ஜி610 எம்சி3 ஜிபியு (Mali-G610 MC3 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த மாடலில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் உள்ளது. இந்த போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோபோகஸ் கேமரா வருகிறது.
இதில், மேக்ரோ மற்றும் டெப்த் லென்ஸ் ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) வருகிறது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ மாடலில் 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரையில், வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) ஆகியவை வருகின்றன.
இந்த போன் சிலிகான்/வேகன் லெதர் (Silicone/Vegan Leather) பேக் பேனல் கொண்டுள்ளது. பிளாக் பியூட்டி (Black Beauty), கேனீல் பே (Caneel Bay) மற்றும் சூதிங் சி (Soothing Sea) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் லெதர் மற்றும் கிளாஸ் பேக் பேனல் வேரியண்ட் ஆப்சன் இருக்கிறது.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி
மாடலின் விலை ரூ.25,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று (செப்டம்பர் 21) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு அறிமுக சலுகையாக 2 மாடல்களுக்கும் ரூ.3000 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, 8 ஜிபி மாடலை ரூ.20,999க்கும், 12 ஜிபி மாடலை ரூ.22,999க்கும் வாங்கிக்கொள்ள முடியும். இதுவொரு லிமிடெட் பீரியட் ஆஃபர் மட்டுமேயாகும். இந்த போனை வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் மோட்டோரோலா (Motorola) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்துகொள்ளலாம்.
இந்த போனை பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்தால், ரூ.1000 உடனடி தள்ளுபடி, ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் 6 மாதத்துக்கான நோ காஸ்ட் இஎம்ஐ வழங்கப்படும். இதற்கு குறிப்பிட்ட வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்த வேண்டும். பட்ஜெட் விலையில் கர்வ்ட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 68W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் வேண்டுமென்றால், இந்த போன் நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








