Home
Mobile

அசால்ட்டா ரூ.4000 டிஸ்கவுண்ட்.. CURVED டிஸ்பிளே.. 32MP செல்பீ.. 68W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

மோட்டரோலா பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி ரூ.4000 டிஸ்கவுண்ட்டுடன் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo) போன் விற்பனைக்கு வருகிறது. இதன் முழு அம்சங்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அம்சங்கள் (Motorola Edge 40 Neo Specifications): இந்த மோட்டோரோலா நியோ மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7030 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7030 6nm) சிப்செட் மற்றும் மாலி - ஜி610 எம்சி3 ஜிபியு (Mali-G610 MC3 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டிருக்கிறது.

ரூ.4000 டிஸ்கவுண்ட்.. CURVED டிஸ்பிளே.. 32MP செல்பீ.. 5000mAh பேட்டரி!

இந்த போன் 6.55 இன்ச் (2400×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு கர்வ்ட் (Curved) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. அதோடு 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போன் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது. அந்த வகையில், 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோபோகஸ் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் மேக்ரோ (Macro) மற்றும் டெப்த் (Depth) லென்ஸ் ஆப்சனும் வருகிறது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த மெயின் கேமராவில் குவாட் பிக்சல் (Quad Pixel) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டரோலா போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. இதில் டைப்-சி ஆடியோ (Type-C Audio), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த போனில் முக்கிய அம்சமாக IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) வருகிறது. இந்த மோட்டோரோலா நியோ மாடலில் 68W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைப்-சி சார்ஜிங் வருகிறது.

இந்த போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை-பை 6இ (Wi-Fi 6E), என்எப்சி (NFC) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போனின் பேக் பேனல் சிலிகான்/வேகன் லெதர் (Silicone/Vegan Leather) மெட்டீரியல் கொண்டுள்ளது.

அதோடு பிளாக் பியூட்டி (Black Beauty), சூதிங் சீ (Soothing Sea) மற்றும் கேனீல் பே (Caneel Bay) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல், கிளாஸ் பேக் பேனல் வேரியண்ட் ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று (செப்டம்பர் 28) முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த மாடல்களுக்கு அறிமுக சலுகையாக ரூ.3000 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.20,999க்கும், 12 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.22,999க்கும் வாங்கிக்கொள்ளலாம்.

பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் மோட்டோரோலா (Motorola) ஆகிய தளங்களில் இரவு 7 மணி முதல் ஆர்டர் செய்து கொள்ள முடியும். இந்த அறிமுக சலுகை போக பிளிப்கார்ட்டில் ரூ.1000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது. இதனை ஐசிஐசிஐ, கோடக் வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அதோடு ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும், 6 மாதத்துக்கான நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையும் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 40 Neo With 12GB RAM, Dimensity 7030 Sale on Flipkart in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X