கொத்தா தூக்குவீங்க.. 12ஜிபி ரேம்.. P-OLED டிஸ்பிளே.. வருகிறது புதிய Motorola போன்.. என்ன மாடல்?
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம்.
அதாவது மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo) எனும் ஸ்மார்ட்போனை தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம். குறிப்பாக மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மாார்ட்போன் ஆனது வரும் செப்டம்பர் 15-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ பி-ஒஎல்இடி (P-OLED) ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 300 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 1050 (Dimensity 1050) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன். எனவே இந்த மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 ( Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ஆனால் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன். மேலும் 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ( 68W fast charging) வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.

5ஜி, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன் மேலும் செப்டம்பர் 15-ம் தேதி இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் ஆனது முதலில் இத்தாலியில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பின்பு தான் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.
டைமன்சிட்டி 1050 சிப்செட், 50எம்பி பிரைமரி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 5ஜி ஆதரவுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








