தாறுமாறான போன்.. பட்ஜெட் விலை.. 12ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. 68W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 21-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு மோட்டோரோலா எட்ஜ் 40 போனின் விலைப் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விரிவான தகவலை இங்கே பார்க்கலாம்.
அதாவது மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனை ரூ.24,999 விலையில் அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக இந்த புதிய மோட்டோரோலா போன் ஒன்பிளஸ் போன்களுக்கு போட்டியாக வெளிவருகிறது. மேலும் இந்த போனின் அம்சங்கள் ஏற்கனவே இணையதளத்தில் கசிந்துள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 7030 ( MediaTek Dimensity 7030) சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான மோட்டோ எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Moto Edge 40 Neo) ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிஒஎல்இடி (Full HD+ pOLED) ) டிஸ்பிளேவுடன் வெளிவரும். மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
50எம்பி பிமைரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இந்த போன் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபி68 ரேட்டிங் (IP68 rating), டால்பி ஆடியோ வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 68W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவரும் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ போன். சோதிங் சீ (Soothing Sea) மற்றும் கேனீல் பே (Caneel Bay) நிறங்களில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அறிமுகமாகும். குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் போன்களை வாங்குவதை விட இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








