ஆர்டர் அள்ளுமே.. 50எம்பி கேமரா.. 68W சார்ஜிங்.. அசத்தலான மோட்டோரோலா போனுக்கு ஆஃபர்.. எந்த மாடல்?
அக்டோபர் 8-ம் தேதி பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்க உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க முடியும். அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மோட்டோ, ஒன்பிளஸ், விவோ, சியோமி உள்ளிட்ட நிறுவனங்களின் போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதாவது தற்போது வெளியான தகவலின்படி, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது மோட்டோரோலா எட்ஜ் 40 போனை ரூ.23,999 விலையில் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது.

அதாவது தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகள் பயன்படுத்தி இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 போனை ரூ.23,999 விலையில் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3டி வளைந்த pOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 40. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.
ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். வீடியோ எடிட்டிங் ஆப், கேமிங் ஆப் உள்ளிட்ட அனைத்தையும் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டு இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போனில் 4400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங்,15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 மாடல்.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன். பின்பு டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 மாடல். மேலும் இந்த போனின் எடை 167 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி68 சான்றிதழ் உடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ ஆதரவு, 3 மைக்ரோஃபோன்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்லிப்ஸ் பிளாக், நெபுலா க்ரீன் மற்றும் லூனார் ப்ளூ நிறங்களில் இந்த முரட்டுத்தனமான மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








