Home
Mobile

கண்ணை பறிக்கும் அழகு.. இந்தியாவுக்கு வருகிறது அசத்தலான Motorola 5ஜி போன்.!

சமீபத்தில் ஐரோப்பாவில் மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்தது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதாவது இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் ஆனது இந்த மே மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்தியாவுக்கு வருகிறது அசத்தலான Motorola 5ஜி போன்.!

புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3டி வளைந்த pOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8020 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். வீடியோ எடிட்டிங் ஆப், கேமிங் ஆப் உள்ளிட்ட அனைத்தையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன். மேலும் 8ஜிபி ரேம் மறறும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் 40. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டு இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 மாடல்.

இந்தியாவுக்கு வருகிறது அசத்தலான Motorola 5ஜி போன்.!

அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன். பின்பு டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 மாடல். மேலும் இந்த போனின் எடை 167 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போனின் விலை EUR 599.99 (இந்திய மதிப்பில் ரூ.54,000). பின்பு இந்த போன் எக்லிப்ஸ் பிளாக், லூனார் ப்ளூ மற்றும் நெபுலா க்ரீன் நிறங்களில் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல் இந்த மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Edge 40 5G smartphone will be launched in India later this month : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X