இந்தியாவில் முதல் 200MP கேமராவுடன் Motorola Edge 30 Ultra அறிமுகம்.! விலையை சொன்னா வாங்குவீங்களா?

|

Motorola Edge 30 Ultra என்ற புதிய மிரட்டலான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை மோட்டோரோலா நிறுவனம் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவில் உள்ள கேமரா பிரியர்களைக் கவர்ந்துள்ளது. காரணம், இந்தியாவில் முதல் முறையாக 200 மெகா பிக்சல் கொண்ட கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும் முதல் ஸ்மார்ட்போன் சாதனம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் விலை மற்றும் விற்பனை தகவலைப் பார்க்கலாம்.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Motorola Edge 30 Ultra

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Motorola Edge 30 Ultra

மோட்டோரோலா நிறுவனம் இன்று இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Motorola Edge 30 Ultra மற்றும் Motorola Edge 30 Fusion என்று இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் தரமான அம்சங்களுடன் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் மாடலை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

200MP கேமரா முதல் 125W ஃபாஸ்ட் சார்ஜிங் வரை எல்லாமே பெஸ்ட்

200MP கேமரா முதல் 125W ஃபாஸ்ட் சார்ஜிங் வரை எல்லாமே பெஸ்ட்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ராவின் முக்கிய சிறப்பம்சமாக, 200MP பிரைமரி கேமரா அனைவரின் கவனத்தையும் ஈற்றுள்ளது. இருப்பினும், இந்த புதிய Motorola Edge 30 Ultra சாதனத்தில் சூப்பர் ஃபாஸ்ட் 125W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் மற்றொரு ஸ்பெஷாலிட்டியாக பார்க்கப்படுகிறது. இது 144Hz கொண்ட POLED டிஸ்பிளே உடன் வருகிறது. சரி, இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனைக்குக் கிடைக்கும் தகவல்கள் பற்றி அறிந்துகொள்ளலாம்.

பட்ஜெட் விலையில் பெஸ்டான ஆல்ரவுண்டர் 5G போன் வேண்டுமா? அப்போ இந்த லிஸ்டை பாருங்க.!பட்ஜெட் விலையில் பெஸ்டான ஆல்ரவுண்டர் 5G போன் வேண்டுமா? அப்போ இந்த லிஸ்டை பாருங்க.!

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா விலை

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா விலை

Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் +128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.54,999 ஆகும். இந்த சாதனம் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்குக் கிடைக்கும். இது Interstellar Black மற்றும் Starlight White ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். வழக்கம் போல, ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுடன் ரூ.3,000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா சிறப்பம்சம்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா சிறப்பம்சம்

Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் 6.7' இன்ச் கொண்ட 144 ஹெர்ட்ஸ் உடன் கூடிய முழு எச்டி+ தெளிவுத்திறனுடன் கூடிய pOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது உங்களுக்கு சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 60MP செல்பி கேமரா உடன் பஞ்ச் ஹோல் கட்அவுட் வடிவமைப்பை பெற்றுள்ளது. இந்த போனின் ரியர் கேமரா 200MP சாம்சங் HP1 பிரைமரி சென்சார் உடன், 50MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 12MP டெலிஃபோட்டோ ஷூட்டருடன் வருகிறது.

உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!

Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போனின் சிஸ்ட் கூட வேற லெவல் தான்

Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போனின் சிஸ்ட் கூட வேற லெவல் தான்

Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் 8GB LPDDR5 ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 125W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4610mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MyUX 4.0 இயங்குதளத்தில் இயக்குகிறது.

இந்தியாவில் இது தான் இப்போதைக்கு ஹை-எண்டு கேமரா போன்

இந்தியாவில் இது தான் இப்போதைக்கு ஹை-எண்டு கேமரா போன்

Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஒரு USB டைப்-சி போர்ட் உடன் வருகிறது. உண்மையிலேயே, இந்த ஸ்மார்ட்போன் இன்றைய தேதியில் மிகச் சிறந்த பிளாக்ஷிப் மாடலாகும். உங்களுக்கு பெஸ்டான கேமரா வேண்டும் என்று விரும்புகிறீர்களானால், கட்டாயம் இந்த Motorola Edge 30 Ultra சாதனத்தைக் கவனிக்க மறக்காதீர்கள். இப்போதைக்கு இந்தியாவில் அதிக மெகா பிக்சல் கேமராவுடன் வெளிவந்திருக்கும் புது வரவு இது மட்டுமே.

Best Mobiles in India

Read more about:
English summary
Motorola Edge 30 Ultra with 200MP Camera Flagship Phone Launched in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X