3 நாள் மட்டும் காத்திருங்கள்- 200MP கேமராவுடன் அறிமுகமாகும் Motorola ஸ்மார்ட்போன்!

|

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு சுவாரஸ்ய அம்சங்கள் இருக்கிறது.

இந்த அம்சங்களை அறிந்துக் கொண்டால்.. வாங்கினால் இந்த ஸ்மார்ட்போனை தான் வாங்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கும் கண்டிப்பாக வரும். தகவலை பார்க்கலாம் வாங்க.

ப்ரீமியம் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்

ப்ரீமியம் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்

மோட்டோரோலா இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

மோட்டோவின் ப்ரீமியம் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் எட்ஜ் தொடரின் கீழ் அறிமுகமான நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனும் அதே எட்ஜ் தொடரில் தான் அறிமுகமாக இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டுத் தேதி ஆனது தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா வெளியீட்டு விவரங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா வெளியீட்டு விவரங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் வெளியீட்டுத் தேதியை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்

செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்

பிரபல டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ், புதிய மோட்டோ ஃப்ளாக்ஷிப் போனின் அறிமுகத்தை உறுதிப்படுத்தும் வகையிலான பிளிப்கார்ட் போஸ்டர் ஒன்றை பகிர்ந்தார்.

மேலும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா செப்டம்பர் 10 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகும் என டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

Flipkart Big Billion Days இல் விற்பனை தொடங்கலாம்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் முன்னதாகவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டு விட்டது.

கசிவுத் தகவல் உண்மையாகும் பட்சத்தில், Flipkart Big Billion Days 2022 புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா அம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா அம்சங்கள்

அபிஷேக் யாதவ் பகிர்ந்த பிளிப்கார்ட் போஸ்டரின் மூலம் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் தெரியவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 200 எம்பி கேமரா கொண்டிருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மிகப்பெரிய கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

இதே 200 எம்பி கேமராவை மோட்டோ நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ எக்ஸ் 30 ப்ரோவிலும் இடம்பெற்றது.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா அம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா அம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதை வைத்து இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை உறுதிப்படுத்தி விடலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 144Hz ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் FHD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.7 இன்ச் வளைந்த ஓஎல்இடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

Snapdragon 8+ Gen1 செயலி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. பெரும்பாலான ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் இதே சிப்செட் தான் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

OIS ஆதரவுடன் கூடிய 200MP கேமரா

OIS ஆதரவுடன் கூடிய 200MP கேமரா

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் OIS ஆதரவுடன் கூடிய 200MP முதன்மை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் 12MP டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 50MP அல்ட்ரா-வைட் சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது.

செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 60MP கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

125W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

125W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி இடம்பெற்றிருக்கிறது. இதை சார்ஜ் செய்வதற்கு என 125W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இருக்கிறது.

பாதுகாப்பு அம்சத்துக்கு என இன்-ஸ்க்ரீன் கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளது. இதே அம்சங்கள் தான் இந்தியா மாறுபாட்டிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Motorola Edge 30 Ultra with 200 MP camera to launch in India soon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X