200MP கேமரா கொண்ட Motorola Edge 30 Ultra ரிவ்யூ- வாங்கலாமா, வேணாமா?

|

மோட்டோரோலா நிறுவனம் தனது முதல் அல்ட்ரா ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது பல சுவாரஸ்யமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் 200 எம்பி கேமரா உடன் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது முன் மற்றும் பின்புற பேனல்களில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது.

இதன் பின் பேனல் கண்கள் கூசும் அளவு பளபளப்பு தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

ப்ரீமியம் ஸ்மார்ட்போனில் சிறந்த தேர்வாக புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்

ப்ரீமியம் ஸ்மார்ட்போனில் சிறந்த தேர்வாக புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போனில் ஒருசில அம்சங்கள் விடுபட்டிருந்தாலும் அது இந்த ஸ்மார்ட்போனுக்கு ஏதுவாக தான் இருக்கிறது.

ப்ரீமியம் ஸ்மார்ட்போனை வாங்க விரும்புபவர்களுக்கு மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் எந்தவித ஆச்சரியுமும் இல்லை.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா: வடிவமைப்பு

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா: வடிவமைப்பு

மோட்டோரோலாவின் பெரிய குறையாக இருந்தது அதன் வடிவமைப்பு தான்.

மோட்டோ நிறுவனம் பல ஆண்டுகளாகவே அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்களில் ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டிருந்தது.

இந்த குறை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வடிவமைப்பு ஆனது அனைத்து முந்தைய வடிவமைப்புகளில் இருந்தும் மாறுபட்டதாக இருக்கிறது.

மெல்லிய பெசல்கள், சதுர வடிவ கேமரா தொகுதிகள், பிரமாண்டமான கேமரா சென்சார் என பல மேம்பாடுகள் இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போனில் இருக்கிறது.

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் எஸ்ஓசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் எஸ்ஓசி சிப்செட்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது மேம்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

இந்த சிப்செட் தான் சமீபத்திய அனைத்து ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் ரூபாய் வரையிலான ஸ்மார்ட்போன்களில் கூட இந்த சிப்செட் தான் இடம்பெற்றுள்ளது. இது நீடித்த மற்றும் மேம்பட்ட செயல்திறனை வழங்கும்.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவு

அடுத்தடுத்த 3 ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள், 4 வருட பாதுகாப்பு இணைப்புகளை இந்த ஸ்மார்ட்போன் பெறும் என்பது உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. 144Hz ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே, ஸ்மூத் ஆன டச் பயன்பாடு, வேகமான செயல்திறன் என முதன்மையான ஸ்மார்ட்போனுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கிறது.

200 எம்பி கேமரா ஆதரவு

200 எம்பி கேமரா ஆதரவு

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரை இதில் 200 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 200 எம்பி கேமரா உடன் வெளியான முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக 108 எம்பி கேமரா மட்டுமே பார்த்து வந்த நமக்கு 200 எம்பி கேமரா என்பதே மிக சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

கேமரா ஆதரவு எப்படி?

கேமரா ஆதரவு எப்படி?

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா பகல் நேரத்தில் பயன்படுத்தியது வரை மிக சிறப்பாக கேமரா தரத்தில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

200 எம்பி கேமரா ஸ்மார்ட்போனை முதலில் அறிமுகம் செய்யப்போகிறோம் என்று அறிந்த நிறுவனம் கண்டிப்பாக இதில் சிறப்பாக செயல்பட்டிருக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

Motorola Edge 30 Ultra: விலை

Motorola Edge 30 Ultra: விலை

Motorola Edge 30 Ultra ஸ்மார்ட்போனானது ஒரே வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.59,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சக்தி வாய்ந்த அம்சங்கள் மற்றும் கண் கவர் வடிவமைப்புடன் ஒரு ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் இது உங்களுக்கு ஏதுவாக இருக்கும்.

இதுவரை வெளியான அனைத்தும் மேலோட்டமான தகவல்களே என்பதை நினைவில் கொள்க. விரைவில் முழு ரிவ்யூக்களும் விரிவாக வழங்கப்படும்.

Best Mobiles in India

English summary
Motorola Edge 30 Ultra Review: How does a 200 megapixel camera work?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X