200MP கேமரா கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.!
பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Moto Days sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா
அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ரூ.59,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.54,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் ரூ.5000 வரை விலைகுறைப்பை பெற்றுள்ளது.

pOLED curved டிஸ்பிளே
இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் pOLED curved டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 2400 x 1080 பிக்சல்ஸ், 1250 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்
மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

200எம்பி மெயின் கேமரா
மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 200எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 60எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

4610 எம்ஏஎச் பேட்டரி
மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 4610 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 50 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 802.11 a/b/g/n/ac/ax, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த
அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் Dolby Atmos ஆதரவு, 10W வயர்லெஸ் பவர் ஷேரிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன்
வெளிவந்துள்ளது இந்த மோட்டோ போன்.

கருப்பு மற்றும் வெள்ளை
குறிப்பாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 200 எம்பி கேமரா வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications