விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.!
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி ரியர் கேமரா, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு சிறப்பு
அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல் 6.6-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் என பல்வேறு சிறப்பானஅம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த சிப்செட் மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன்வெளிவரும்.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

5ஜி, 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி, 3.5 ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய 5ஜி
ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் பல நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications