இந்த போன் உலகத்துல கொஞ்ச பேர் கிட்ட தான் இருக்கு.! இப்போ புதுசா இந்தியாவுக்கு வந்திருக்கு.!

|

லெனோவாவிற்கு சொந்தமான நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா (Motorola Edge 30 Ultra) மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் (Motorola Edge 30 Fusion) ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் எட்ஜ் 30 தொடரை விரிவுபடுத்தியது.

இதில் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா என்ற மாடலின் புதிய 12 ஜிபி வேரியண்ட் மாடலை நிறுவனம் இந்தியாவில் இன்று சத்தமில்லாமல் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகத்தின் முதல் 200MP கேமரா ஸ்மார்ட்போன்.!

உலகத்தின் முதல் 200MP கேமரா ஸ்மார்ட்போன்.!

இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் கர்வுட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

இருப்பினும், மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ராவில் உள்ள முக்கியமான சிறப்பம்சமே, இதில் உள்ள 200 மெகாபிக்சல் கேமரா சென்சார் தான்.!

இந்தியாவிலும், உலக அளவிலும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா (Motorola Edge 30 Ultra) ஸ்மார்ட்போன் மாடலில் மட்டும் தான் இவ்வளவு பெரிய சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இதுவே உலகின் முதல் 200MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்.!

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ராவின் 12GB ரேம் மாடல் என்ன விலை?

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ராவின் 12GB ரேம் மாடல் என்ன விலை?

முன்னதாக, மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஒரு 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்போது, மோட்டோரோலா ட்விட்டரில் எட்ஜ் 30 அல்ட்ரா மாடலின் 12 ஜிபி வேரியண்ட் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

லெனோவாவுக்குச் சொந்தமான நிறுவனம், இந்த சாதனத்தின் 12ஜிபி ரேம் +256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.56,999 அறிமுக விலையில் விற்பனை செய்கிறது.

இந்த 12ஜிபி வேரியண்ட் மாடலின் அசல் விலை ரூ.64,999 ஆகும்.

LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய புது விதி.! LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய புது விதி.! "இது" தெரியலான சிக்கல் வரலாம் மக்களே.!

சலுகையுடன் எங்கிருந்து வாங்கலாம்?

சலுகையுடன் எங்கிருந்து வாங்கலாம்?

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா இதற்கு முன், ஒரே 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வகையில் மட்டுமே கிடைத்தது.

இதன் விலை ரூ.59,999 ஆகும். ஆனால் Flipkart இல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன், நீங்கள் இந்த சாதனத்தை இப்போது இன்னும் குறைந்த விலையில் வாங்க இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முன், இதன் முழு சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்பெஷலிட்டி என்ன?

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்பெஷலிட்டி என்ன?

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா டிவைஸ் 6.67' இன்ச் வளைந்த pOLED டிஸ்ப்ளேவுடன் 144Hz புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே HDR10+ ஐ ஆதரிக்கிறது.

இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது.

குறிப்பாக மோட்டோரோலா நிறுவனம் மூன்று வருட ஆண்ட்ராய்டு OS அப்டேட்களை உறுதி செய்துள்ளது. ஆண்ட்ராய்டு 13,14 மற்றும் 15 நிச்சயமாகக் கிடைக்கும்.

MS Dhoni அறிமுகம் செய்த புது ட்ரோனி ட்ரோன்.! இந்த Drone கம்பெனிக்கு சொந்தக்காரர் தோனியா?MS Dhoni அறிமுகம் செய்த புது ட்ரோனி ட்ரோன்.! இந்த Drone கம்பெனிக்கு சொந்தக்காரர் தோனியா?

உலகத்திலேயே இப்படி ஒரு கேமரா அம்சம் இதில் மட்டும் தான் உள்ளது.!

உலகத்திலேயே இப்படி ஒரு கேமரா அம்சம் இதில் மட்டும் தான் உள்ளது.!

இதில் OIS ஆதரவுடன் பின்புறத்தில் 200 மெகாபிக்சல் சாம்சங் சென்சாரை கொண்டுள்ளது.

முதன்மை கேமராவுடன் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் உள்ளது. இது மேக்ரோ கேமராவாக இரட்டிப்பாகிறது. கடைசியாக, 12 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் உள்ளது.

முதன்மை கேமரா 30fps இல் 8K ரெக்கார்டிங் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பக்கத்தில் இது 60-மெகாபிக்சலை கொண்டுள்ளது. இது முன்பக்கத்தில் 4K ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது.

வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ரெண்டுமே இருக்கா.!

வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ரெண்டுமே இருக்கா.!

இது நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் வழங்கும் என்று மோட்டோரோலா தெரிவித்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 4,610mah பேட்டரியை பேக் செய்துள்ளது. இது 125W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ஃபோன் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா மிகப்பெரிய கேமராவை கொண்டுள்ளது.

இது டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் ஒரு கேமரா 200 மெகா பிக்சலை கொண்டுள்ளது என்பதை மறக்காதீர்கள்.!

Best Mobiles in India

English summary
Motorola Edge 30 Ultra 12 GB Variant Launched In India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X