Home
Mobile

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ.!

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வரும் பிப்ரவரி 24-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ

அதேபோல் இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ புளூடூத் SIG இணையதளத்தில் காணப்பட்டது. இந்த சாதனத்தின் மாடல் எண் XT-2201-1 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன்வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 576 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸனாப்டிராகன் 8 ஜென் சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு MYUI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி OmniVision's OV50A40 பிரைமரி கேமரா +50எம்பிவைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார்என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும்
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 60எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

 புதிய ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும்கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 68 வாட்பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2,

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளைஉருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola Edge 30 Pro with 50 Mega Pixel Camera Launching in India on February 24: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X