இந்தியா: அசத்தலான அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாகும் மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ.!
மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது ஆன்லைனில் கசிந்த மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன்வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 576 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸனாப்டிராகன் 8 ஜென் சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு MYUI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி OmniVision's OV50A40 பிரைமரி கேமரா + 50எம்பிவைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார்என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 60எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும்கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 68 வாட்பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான
ஸ்மார்ட்போன் மாடல்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளைஉருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்


Click it and Unblock the Notifications